கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, 2023 அக்டோபர் 26 அன்று புதுதில்லியில் "கூட்டுறவுத் துறை மூலம் மேம்பட்ட மற்றும் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தேசிய கருத்தரங்கில்" உரையாற்றுகிறார்.

Posted On: 25 OCT 2023 1:57PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, 26அக்டோபர் 2023 (வியாழக்கிழமை) புதுதில்லியில் இந்திய விதை கூட்டுறவு சங்கம்  (பிபிஎஸ்எஸ்எல்) ஏற்பாடு செய்துள்ள "கூட்டுறவுத் துறை மூலம் மேம்பட்ட மற்றும் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தேசிய கருத்தரங்கில்" உரையாற்றுகிறார். அப்போது திரு அமித் ஷா அதன் லோகோ, வலைத்தளம் மற்றும் கையேட்டையும் வெளியிடுவார். இந்திய விதை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்களை வழங்குவார். இக்கருத்தரங்கில், இந்திய விதை கூட்டுறவு சங்கத்தின் நோக்கங்கள், பி.ஏ.சி.எஸ் மூலம் விதை உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் பயிர்களின் உற்பத்தித்திறன் மற்றும் ஊட்டச்சத்தில் விதைகளின் பங்கு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் மேம்பாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

 

கூட்டுறவுத் துறையின் மூலம் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுடன் மேம்பட்ட மற்றும் பாரம்பரிய விதை ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கான ஒரு குடை அமைப்பாக செயல்பட தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய  கூட்டுறவு துறை அமைச்சர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்திய விதை கூட்டுறவு சங்கம் (பாரதிய பீஜ் சகாகாரி சமிதி லிமிடெட், பி.பி.எஸ்.எஸ்.எல்) உருவானது. தேவை அடிப்படையிலான விதை உற்பத்தி, சேமிப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விதைகளை பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்தல், ஏற்றுமதி ஆதரவு, தர மேம்பாடு மற்றும் தரப்படுத்தல், தேவையான சான்றிதழ் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இது உதவும். பல்வேறு பயிர்கள் மற்றும் ரகங்களின் பாரம்பரிய விதைகளை பெருக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு பி.பி.எஸ்.எஸ்.எல் உதவும்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் "கூட்டுறவின் மூலம் செழிப்பு "என்னும் தொலைநோக்குப் பார்வையின் மற்றொரு முக்கிய படியாக, இந்திய விதை கூட்டுறவு அமைப்பின் மூலம் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகம் நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும். இது விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், இறக்குமதி செய்யப்படும் விதைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும், "மேக் இன் இந்தியா" வை ஊக்குவிக்கும். தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுக்கும்.

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த கடந்த 27 மாதங்களில் எடுக்கப்பட்ட 54 புதிய முயற்சிகள் குறித்து கூட்டுறவு அமைச்சக அதிகாரிகளின் விளக்கத்துடன் கருத்தரங்கு தொடங்குகிறது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 2000 பங்கேற்பாளர்களைத் தவிர, ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களும் காணொளிக் காட்சி மூலம் இந்த ஒரு நாள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ), கிருஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (கிரிப்கோ) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நாஃபெட்) மற்றும் இந்திய அரசாங்கத்தின் இரண்டு முக்கிய சட்டப்பூர்வ அமைப்புகளான தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்.டி.டி.பி) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) ஆகியவை இணைந்து பி.பி.எஸ்.எஸ்.எல் நிறுவனத்தை மேம்படுத்தியுள்ளன.

 

************* 

AD/PKV/KRS



(Release ID: 1970966) Visitor Counter : 89