பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் ராணுவ நிலைகளைப் பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி (எல்ஏசி) யில் பாதுகாப்புத் தயார்நிலையை ஆய்வு செய்தார்


தவாங்கில் துருப்புகளுடன் தசரா கொண்டாடும் அவர் ஆயுத பூஜை செய்கிறார்

Posted On: 24 OCT 2023 12:15PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவ  நிலைகளைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அக்டோபர் 24, 2023 அன்று, பார்வையிட்டு, அங்குள்ள ஆயுதப்படைகளின் தயார்நிலை குறித்து நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர், அவர்களுடன் தசரா கொண்டாடினார். கடினமான சூழ்நிலைகளில் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்கள், தேசமும் அதன் மக்களும் பாதுகாப்பாக இருப்பதை எப்போதும் உறுதி செய்யும் அவர்களின் தளராத மனப்பான்மை, அசைக்க முடியாத அர்ப்பணிப்புஈடு இணையற்ற தைரியம் ஆகியவற்றுக்காக பாதுகாப்பு அமைச்சர் நன்றி தெரிவித்தார். ஒட்டுமொத்த தேசமும் ஆயுதப்படைகள் பற்றி பெருமிதம் கொள்கிறது, அவர்களுடன் துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.

தவாங்கில் ராணுவத்தினருடன்  ஆயுத பூஜை செய்த திரு ராஜ்நாத் சிங் , அங்கு, இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது தசரா என்பதை  அவர் மீண்டும் வலியுறுத்தினார். துணிச்சலான ஆயுதப்படை வீரர்களின் நீதி மற்றும் தர்மம் விஜயதசமி பண்டிகையின் நெறிமுறைகளுக்கு வாழும் சான்றாக உள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்ததற்கும், அது இப்போது மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும் ஆயுதப்படைகளின் வீரமும் அர்ப்பணிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதைப்  பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். அண்மையில் தாம் மேற்கொண்ட இத்தாலி சுற்றுப்பயணத்தை மேற்கோள் காட்டிய அவர், நாயக் யஷ்வந்த் காட்கே மற்றும் போராடிய பிற இந்திய வீரர்களின் பங்களிப்பை கௌரவிப்பதற்காக கட்டப்பட்டுள்ள மன்டோன் நினைவிடத்திற்கு (பெருஜியா மாகாணம்) பயணம்  செய்ததாக அவர் கூறினார்.  இரண்டாம் உலகப் போரில் மன்டோனை விடுவிப்பதற்கான இத்தாலி நடவடிக்கைக்காக இந்தியர்கள் மட்டுமல்ல, இத்தாலி மக்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.  இந்திய வீரர்களின் துணிச்சல் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம் இது என்று அவர் கூறினார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சாதனங்களை  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து  நாட்டின் ராணுவ வலிமையை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை சுட்டிக் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் 'தற்சார்பு இந்தியாவை' நோக்கி மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பெல்லாம் ராணுவத்தை மேம்படுத்த இறக்குமதியை நம்பியிருந்தோம். ஆனால் இன்று, பல முக்கிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் நாட்டிற்குள் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும், இந்தியாவில் சாதனங்களை உற்பத்தி செய்யவும் உள்நாட்டுத் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட ஊக்குவிக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டில், பாதுகாப்பு ஏற்றுமதியின் மதிப்பு சுமார் ரூ.1,000 கோடியாக இருந்தது, ஆனால் இன்று நாம்  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறோம் , என்று அவர் கூறினார்.

***

ANU/AD/SMB/DL


(Release ID: 1970402) Visitor Counter : 97