பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கிளப் எறிதல்- எஃப் 51 பிரிவில் அமித் சரோஹா வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 23 OCT 2023 5:22PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கிளப் எறிதல் - எஃப்51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கிளப் எறிதலில் (எஃப் 51) வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர் தது அபாரமான திறமைகள் மற்றும் உத்வேகத்தால் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கட்டும்"

 

--------

(Release ID: 1970117)

ANU/AD/IR/RS/KRS


(Release ID: 1970260) Visitor Counter : 87