உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமானப்போக்குவரத்து விதிகள், 1937 திருத்தம்: விமானப்போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான சிறந்த நடவடிக்கை

Posted On: 16 OCT 2023 11:40AM by PIB Chennai

2023, அக்டோபர் 10 அன்று அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விமானப்போக்குவரத்து விதிகள், 1937 திருத்தம் என்பது வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. 937 ஆம் ஆண்டின் விமானப்போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்வது  விமானப்போக்குவரத்தில் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

தற்போதுள்ள பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, தொழில்துறை பங்குதாரர்களுடன் கணிசமான ஆலோசனைகளின் விளைவாக 1937 விமானப் போக்குவரத்து விதிகளுக்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள், நாட்டின் விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறைகளை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகள், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கின்றன.

விமானப்போக்குவரத்து விதிகள், 1937 திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று விதி 39 சி திருத்தம் ஆகும். இந்த திருத்தத்தின் கீழ், விமானிகளுக்கான உரிமம் மற்றும் சரக்குப் போக்குவரத்து விமானங்களின் விமானிகளுக்கான உரிமம் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் விமானிகள் மற்றும் விமானப்போக்குவரத்துத் தலைமை இயக்குநரக அதிகாரிகள் மீதான நிர்வாக சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1937 ஆம் ஆண்டின் விமானப் போக்குவரத்து விதிகளுக்கான இந்தத் திருத்தங்கள் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி மற்றும் நீடித்தத்தன்மையை அதிகரிக்கும். இது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் தரங்களில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்.

***

ANU/SMB/IR/AG/KPG



(Release ID: 1968029) Visitor Counter : 137