பிரதமர் அலுவலகம்
அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2023 8:42AM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
டாக்டர் கலாமின் பணிவான மனப்பான்மையையும், அறிவியல் திறமையையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். நாட்டுக்கு அவர் அளித்த ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும்."
***
ANU/AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1967838)
வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam