பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 OCT 2023 12:39PM by PIB Chennai

வடகிழக்கு விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருவதாக திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்துப் பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்: பிரதமர்

***

ANU/SM/IR/KPG/GK


(रिलीज़ आईडी: 1966971) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam