பிரதமர் அலுவலகம்
கடினமான இத்தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர்: பிரதமர்
Posted On:
10 OCT 2023 4:07PM by PIB Chennai
இஸ்ரேல் நாட்டில் நிலவும் நிலைமை குறித்த தகவலைத் தமக்குத் தெரிவித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்த பிரதமர், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தொலைபேசி வாயிலாக தற்போதைய நிலைமை குறித்து தமக்கு தெரிவித்ததற்காக நான் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு நன்றி கூறுகிறேன். இந்தக் கடினமான தருணத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியுடன் துணை நிற்கிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது.”
***
SMB/ANU/IR/RS/KV
(Release ID: 1966311)
Visitor Counter : 186
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam