மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மாநில திறன் மேம்பாட்டு பயிலரங்குகளை தேசிய மின் ஆளுமைப் பிரிவு (என்.இ.ஜி.டி) தொடங்கியது
Posted On:
10 OCT 2023 11:02AM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுமைப் பிரிவின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அறிவுசார் கூட்டாண்மைகளுடன் இணைந்து மாநிலத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. சேவை வழங்கலை மேம்படுத்துவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் திறனையும், புதிய டிஜிட்டல் அமைப்புகளுக்கு இடமளிக்கும் கொள்கைகள் மற்றும் உத்திகளை வரையறுப்பதே இந்தப் பயிலரங்குகளின் நோக்கமாகும்.
மகாராஷ்டிராவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், 2023 அக்டோபர் 9 முதல் 12 வரை முதல் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்முயற்சிகளை ஏற்றுக்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் தொடர்ச்சியை பராமரிக்கக் கொள்கை வகுக்கும் அரசு அதிகாரிகளின் கீழ் பணிபுரியும் குழுவை அறிமுகப்படுத்துவதே இந்த நான்கு நாள் தீவிரப் பயிற்சியின் நோக்கமாகும்.
என்.இ.ஜி.டி, வாத்வானி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் பாலிசி (டபிள்யூ.ஐ.டி.பி) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் திருமதி நிமா அரோரா இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர்.
இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் எது தங்கள் துறைகளுக்கு சரியான தீர்வை செயல்படுத்த உதவும் என்பதை தீர்மானிக்க மூத்த அரசு அதிகாரிகளுக்கு இது உதவியாக இருக்கும்.
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பயிலரங்குகள் அரசுக்கும், தொழில்துறை கூட்டமைப்புக்கும் பயனளிக்கக்கூடியதாகும். இதனால் பொது சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், சிறந்த அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அரசு திறம்பட பயன்படுத்த முடியும். நடைபெறவிருக்கும் பயிலரங்குகள் கேரளா, லடாக், தெலங்கானா போன்றவற்றில் திட்டமிடப்பட்டுள்ளன.
***
ANU/SMB/PKV/AG/KV
(Release ID: 1966308)
Visitor Counter : 151