பிரதமர் அலுவலகம்

ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 SEP 2023 3:31PM by PIB Chennai

வணக்கம்!

நாட்டில் நவீன இணைப்பின் விரிவாக்கம் முன்னெப்போதும் இல்லாத ஒரு சந்தர்ப்பமாகும். இன்று, ஒரே நேரத்தில் 9 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்று, ராஜஸ்தான், குஜராத், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரா, தெங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வசதியைப் பெற்றுள்ளனர். இன்று அறிமுகம் செய்யப்பட்ட ரயில்கள் முந்தைய ரயில்களுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீனமாகவும் வசதியாகவும் உள்ளன. இந்த ரயில்களில் இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நண்பர்களே,

இதுவரை 25 வந்தே பாரத் ரயில்களின் சேவையால் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்போது, இந்த கட்டமைப்பில் கூடுதலாக 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேர்க்கப்படுகின்றன.

சந்திரயான் -3-ன் வெற்றி மனித எதிர்பார்ப்புகளைகப் புதிய உச்சங்களுக்கு உயர்த்தியுள்ளது. வலுவான மன உறுதி இருந்தால், மிகவும் சவாலான இலக்குகளைக் கூட அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஆதித்யா-எல் 1 அறிமுகம் அளித்துள்ளது.

நண்பர்களே,

நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகவும் நம்பகமான தோழனாக இந்திய ரயில்வே திகழ்கிறது. நம் நாட்டில் ஒரு நாளில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்.

சமீபத்தில், தமிழகத்தில் கோவை, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி முனையம், புனே உள்ளிட்ட பல ரயில் நிலையங்களின் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. கோவை ரயில் நிலையம் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்திய ரயில்வே மற்றும் சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் நிகழும் மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். புதிய வந்தே பாரத் ரயில்களுக்காக நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி!

***

ANU/SMB/IR/AG/KPG

 

 

 



(Release ID: 1965878) Visitor Counter : 75