பிரதமர் அலுவலகம்
100 பதக்கங்கள் - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு மகத்தான சாதனை: பிரதமர்
10-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 8:27AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதால் நாடு மகிழ்ச்சி அடைந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
அக்டோபர் 10-ம் தேதி பிரதமர் இந்த விளையாட்டு போட்டிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மகத்தான சாதனை!
100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கான இந்த வரலாற்று மைல்கல்லை எட்டிய நமது தனித்துவமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு பிரமிப்பூட்டும் செயல்பாடும் வரலாறு படைத்து நம் இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளது.
நமது ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழிவினர் மற்றும் வீரர்களுடன் வரும் 10ம் தேதி கலந்துரையாட நான் ஆவலாக உள்ளேன்".
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965360)
வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Malayalam
,
Assamese
,
Odia
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Telugu