பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடிப்பதற்கான திருத்தப்பட்ட செலவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 04 OCT 2023 4:01PM by PIB Chennai

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் வடக்கு கோயல் நீர்த்தேக்கத் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க, 2017 ஆகஸ்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,622.27 கோடி (மத்திய அரசின் பங்கு: ரூ.1,378.60 கோடி) என்பதற்கு மாறாக ரூ.2,430.76 கோடி மதிப்பீடு (மத்திய அரசின் பங்கு: ரூ.1,836.41 கோடி) என்ற ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் முன்மொழிவுக்கு   பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எஞ்சியுள்ள பணிகள் முடிந்ததும், ஜார்கண்ட் மற்றும் பீகாரில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஆண்டுக்கு கூடுதலாக 42,301 ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்.

1972 ஆம் ஆண்டில் பீகார் அரசு தனது சொந்த வளங்களிலிருந்து அணை கட்டுதல் மற்றும் துணை நடவடிக்கைகளைத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இப்பணி, அந்த ஆண்டில் பீகார் அரசின் வனத்துறையால் நிறுத்தப்பட்டது. அணையில் தேங்கும் தண்ணீர் பெட்லா தேசியப் பூங்கா மற்றும் பலமு புலிகள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக, அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், வடக்கு கோயல் நீர்த்தேக்கத் திட்டத்தின் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கு உதவிசெய்ய மத்திய அரசு முடிவு செய்தது. பலமு புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியைக் காப்பாற்றும் வகையில் நீர்த்தேக்கத்தின் அளவைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகளை ரூ.1622.27 கோடி மதிப்பீட்டில் முடிக்க 2017 ஆகஸ்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

 

***

ANU/AD/SMB/AG/KPG


(Release ID: 1964202) Visitor Counter : 120