பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புக்கு பிரதமர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2023 11:10PM by PIB Chennai

தூய்மை இந்தியா என்பது நாட்டின் அனைத்து குடிமக்களின் கூட்டு பொறுப்பு என்றும், இந்த திசையில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மையை பராமரிக்கவும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

தூய்மை இந்தியா என்பது நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பாகும். இந்த திசையில் பொதுமக்களின் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் முக்கியமானது. நாளை காலை 10 மணிக்கு தூய்மைக்காக ஒரு மணிநேரத்தை அர்ப்பணித்து நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவோம்.

***

ANU/AD/KB/AG/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1963814) வருகையாளர் எண்ணிக்கை : 150