பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்களைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
30 SEP 2023 6:36PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ரோஹன் போபண்ணா, ருதுஜா போஸாலே இணைக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ரோஹன் போபண்ணா, ருதுஜா போஸாலே ஆகியோரின் ஆட்டம் எவ்வளவு சிறப்பானது. டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு மதிப்புமிக்க தங்கத்தை இவர்கள் பெற்றுத் தந்துள்ளனர். இவர்கள் குறிப்பிடத்தக்க குழு உணர்வையும் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
*****
(Release ID: 1962423)
ANU/AD/ SMB/KRS
(Release ID: 1962463)
Visitor Counter : 115
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam