பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை: பிரதமர் திரு நரேந்திர மோடி

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2023 1:15PM by PIB Chennai

குவாலியர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து அதில் தமது கருத்துகளை பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:

"மிகவும் நல்ல விஷயம்! நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கையாகும். குவாலியர் ரயில் நிலையத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவதன் மூலம், அந்த நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணம் மிகவும் எளிதாக இருக்கும்."

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

***

ANU/AP/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1962334) வருகையாளர் எண்ணிக்கை : 166