சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம்போக்குவரத்து வாகனங்களை கட்டாயமாக பரிசோதிப்பதற்கான தேதியை நீட்டிப்பதற்கானஅறிவிப்பு
கட்டாய சோதனைக்கான தேதி இப்போது
1 அக்டோபர் 2024 ஆகும்
Posted On:
21 SEP 2023 12:14PM by PIB Chennai
மத்திய மோட்டார் வாகனச் சட்டம் (சி.எம்.வி.ஆர்) 1989-ன் விதி 175 -ன் படி, பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் போக்குவரத்து வாகனங்களை கட்டாயமாக பரிசோதிப்பதற்கான தேதியை நீட்டிக்க வகை செய்யும் 2023 செப்டம்பர் 12 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 663 (ஈ) அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கட்டாய சோதனைக்கான தேதி இப்போது 2024 அக்டோபர் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விதி 175 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையம் பதிவு ஆணையத்தின் அதிகார வரம்பில் செயல்படும் தானியங்கி சோதனை நிலையம் (இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வரும்) மூலம் மட்டுமே வாகன தகுதி சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959287
***
ANU/AD/IR/AG/GK
(Release ID: 1959342)
Visitor Counter : 189