சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 2023, செப்டம்பர் 17 முதல் நடைபெற்று வரும் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான ஆயுஷ்மான் சுகாதார இயக்கம்

Posted On: 20 SEP 2023 5:19PM by PIB Chennai

அத்தியாவசிய சுகாதார சேவைகளை நிறைவு செய்வதற்கான ஆயுஷ்மான் சுகாதார இயக்கம் செப்டம்பர் 17 முதல் நாடு முழுவதும் நடைபெறுகிறது. 2023, செப்டம்பர் 13 அன்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களால் தொடங்கப்பட்ட 'ஆயுஷ்மான் சுகாதார' இயக்கம், நாடு முழுவதும் சுகாதார அணுகல் மற்றும் உள்ளடக்கத்தை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், புவியியல் தடைகளைத் தாண்டி, யாரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்.

 

ஆயுஷ்மான் சுகாதார இயக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2023,  செப்டம்பர் 17  முதல் 30,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் முகாம்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அவை 2023, செப்டம்பர்  2023 நிலவரப்படி 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.

 

ஆயுஷ்மான் சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த 3 நாட்களில் மட்டும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் சுகாதார இயக்க அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலவச மருந்துகளைப் பெற்றுள்ளனர், மேலும் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இலவச நோய் கண்டறிதல் சேவைகளைப் பெற்றுள்ளனர்.

 

 

  1.  

மொத்த சுகாதார முகாம்கள் நிறைவு

2,271

  1.  

பதிவு செய்த நோயாளிகள்

2,64,042

 

ANU/AD/IR/KPG/KV


(Release ID: 1959126) Visitor Counter : 115