குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு, குடியரசு துணைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து

प्रविष्टि तिथि: 17 SEP 2023 9:53AM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை இன்று தெரிவித்தார்.

 

எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், குடியரசு துணைத் தலைவர் கூறியதாவது:

 

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், சமூக நல மனப்பான்மையும், முன்மாதிரியான செயலாக்கமும், பாரதத்தை மகத்தான முன்னேற்றத்திற்கும், சகாப்த மாற்றத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன. உங்கள் மாண்பு, நம் நாட்டின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

 

மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட பாரதம், நமது நாகரிக நெறிமுறைகளுடன் ஒத்திசைந்து, பொது நலன் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கான உங்கள் அர்ப்பணிப்பை எப்போதும் மதிக்கும்.

 

இனிவரும் காலங்களில் பாரதத்திற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.

 

(Release ID: 1958099)

***

AP/BR/KRS


(रिलीज़ आईडी: 1958132) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Kannada