பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

6 வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் முதல் 12 நாட்களில் நாடு முழுவதும் மக்கள் இயக்கம் இணையத்தள டாஷ்போர்டில் 6 கோடிக்கும் அதிகமான நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Posted On: 16 SEP 2023 3:02PM by PIB Chennai

மார்ச் 2018 இல் ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முதன்முறையாக ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட நாடு தழுவிய மக்கள் இயக்கங்களைத்தொடங்கியுள்ளது. ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் இந்த வருடாந்திர மக்கள் இயக்கங்களை ஊக்குவிப்பதற்காக கவனமாக தொகுக்கப்படுகின்றன, குறிப்பாக அடிமட்டம் வரை நீட்டிக்கப்பட்ட அத்தியாவசிய சத்தான உணவுகளை உட்கொள்வது தொடர்பாக. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் மற்றும் 6 வயது வரையிலான குழந்தைகள் போன்ற குறிப்பிட்டப் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

மக்கள் இயக்கங்கள்  ஆண்டுதோறும் செப்டம்பரில் ஊட்டச்சத்து மாதம் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊட்டச்சத்து இருவார விழா என  இரண்டு முறை கொண்டாடப்படுகின்றன. இன்றுவரை, 10 மக்கள் இயக்கங்கள்  வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டுள்ளன. இதில்  60 கோடிக்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018 முதல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் மற்றும் நிலையான பங்கேற்பைக் காட்டுகிறது.

***

ANU/AP/PKVDL



(Release ID: 1957985) Visitor Counter : 123