சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறையின் புதுமையான முன்முயற்சிகள்: மத்திய அமைச்சர் குமாரி பிரதிமா பவுமிக் தொடங்கி வைக்கிறார்

Posted On: 10 SEP 2023 12:53PM by PIB Chennai

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (டி.இ.பி.டபிள்யூ.டி) ஒரு மாற்றகரமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நோக்கிய அதன் இடைவிடாத தேடலில், இத்துறை குறிப்பிடத்தக்க கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளதுடன், நீடித்த மாற்றத்தைக் கொண்டு வர புதுமையான முன்முயற்சிகளையும் செயல்படுத்தியுள்ளது. கட்டிடக்கலை கவுன்சிலுடன் ஒரு அற்புதமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனித்துவமான ஊனமுற்றோர் அடையாள (யு.டி.ஐ.டி) வலைதளம் மூலம் அநாமதேய தரவுகளை வெளியிடுவது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடுவதில் அதிகாரமளிக்க வடிவமைக்கப்பட்ட பி.எம் தக்ஷ் வலைப்பக்கத்தின் தொடக்கம் வரை‌ ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் குமாரி பிரதிமா பவுமிக், கீழ்க்காணும்  ஐந்து முன்முயற்சிகளைத்  தொடங்கி வைப்பார். இந்த முன்முயற்சிகள் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், ஊனமுற்றோர் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் டி.இ.பி.டபிள்யூ.டி துறையின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

ஐந்து முன்முயற்சிகள் பின்வருமாறு:

1.    கட்டிடக்கலை கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: இளங்கலை கட்டிடக்கலை திட்டங்களில் உலகளாவிய அணுகல் படிப்புகளை கட்டாயமாக்க, இத்துறை கட்டிடக்கலை கவுன்சிலுடன் (சிஓஏ) ஒத்துழைக்கிறது. கட்டமைக்கப்பட்ட சூழல்களில் அணுகல் தணிக்கைகளை நடத்துவதற்கும், அணுகல் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிவில் பொறியாளர்களுக்கான சான்றளிக்கப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த கூட்டாண்மை விரிவடைகிறது.

2.    யு.டி.ஐ.டி.யின் அநாமதேய தரவுகளை வெளியிடுதல்: ஆராய்ச்சி நோக்கங்களுக்காக யு.டி.ஐ.டி வலைதளம் மூலம் அநாமதேய தரவுகளை டி.இ.பி.டபிள்யூ.டி வெளியிடுவது, மாற்றுத்திறனாளிகள் துறையில் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுவதுடன், புரிதலை மேம்படுத்துவதற்கும், இலக்கு இடையீடுகளை தெரிவிப்பதற்கும் பல்வேறு மட்டங்களில் உள்ளார்ந்த வாய்ப்பகளை வழங்குகிறது.

3.    பிரதமரின் தக்ஷ் வலைதளம்: பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடும் மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான டிஜிட்டல் தளமாக பிரதமரின் தக்ஷ் தளத்தை துறை அறிமுகப்படுத்துகிறது, தடையற்ற பதிவு, திறன் பயிற்சி விருப்பங்கள், வேலை பட்டியல்கள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நிர்வாக செயல்முறைகளை இந்த சேவை வழங்குகிறது.

4.    அணுகுவதற்கான வழிகள்: ஊனமுற்றோர் உரிமைகள் குறித்த நீதிமன்றங்கள்: ஊனமுற்றோர் உரிமைகள் குறித்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் ஒரு கையேடாக தொகுக்கப்பட்டுள்ளன. இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறையின் பங்குதாரர்களுக்கு குறிப்பு வழிகாட்டியை வழங்குகிறது.

5.    சி.சி.பி.டி.யின் இணையவழி வழக்கு கண்காணிப்பு வலைதளம்: தானியங்கி நினைவூட்டல்கள் மற்றும் எளிமையான விசாரணை திட்டமிடல் உடன், தடையற்ற இணையவழி புகார் தாக்கலின் முழு செயல்முறையையும் காகிதமற்றதாகவும், திறமையானதாகவும் ஆக்குவதற்குமாற்றுத் திறனாளிகள் தாக்கல் செய்யும் புகார்களைக் கையாள்வதற்கான அதிநவீன பயன்பாட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் பயன்படுத்துகிறார்.

***

ANU/SM/RB/DL



(Release ID: 1956027) Visitor Counter : 197