நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் 8 முதல் மூன்றாம் கட்ட கட்டாய ஹால்மார்க் முத்திரையிடுவதை மத்திய அரசு அறிவித்துள்ளது


தமிழகத்தின் நாகை, திருப்பத்தூர், திருவாரூர் உள்பட நாட்டின் 55 மாவட்டங்கள் புதிதாக சேர்ப்பு

Posted On: 08 SEP 2023 11:38AM by PIB Chennai

தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை (மூன்றாவது திருத்தம்) உத்தரவு, 2023 இன் மூலம் கட்டாய ஹால்மார்க் முத்திரையிடுவதன் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது

கட்டாய ஹால்மார்க் முறையின் மூன்றாவது கட்டம் கட்டாய ஹால்மார்க் முறையின் கீழ் கூடுதலாக 55 புதிய மாவட்டங்களை உள்ளடக்கும். தமிழ்நாட்டில், நாகபட்டினம், திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். இதன் மூலம் கட்டாய ஹால்மார்க் கீழ் வரும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உள்ளது. கட்டாய ஹால்மார்க் முத்திரையின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 55 மாவட்டங்களின் மாநில வாரியான பட்டியல் ஹால்மார்க் பிரிவின் கீழ் www.bis.gov.in இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) வலைத்தளத்தில் கிடைக்கிறது.

இந்த உத்தரவை மத்திய அரசு இன்று அறிவித்தது.

ஜூன் 2021 முதல் நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் முத்திரையை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் தீவிரமாக உள்ளது.

கட்டாய ஹால்மார்க் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளின் எண்ணிக்கை 34,647 லிருந்து 1,81,590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்கு எச்.ஐ.டி ஹால்மார்க் முத்திரையிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் பிஐஎஸ் கேர் பயன்பாட்டின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 2.3 லட்சத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 12.4 லட்சமாக அதிகரித்துள்ளது.

***

 

ANU/AD/PKV/KPG

 


(Release ID: 1955600) Visitor Counter : 181