தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சர்வதேச ஊடக மையத்தில் ஏற்பாடுகள் குறித்து திரு அனுராக் தாக்கூர் ஆய்வு
Posted On:
05 SEP 2023 6:23PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று சர்வதேச ஊடக மையத்திற்குச் சென்று ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தயார்நிலை மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். செப்டம்பர் 9 முதல் 10 வரை புதுதில்லியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கான இடமாக பாரத் மண்டபம் இருக்கும். ஆய்வில் பங்கேற்க வந்த அமைச்சர் எம்.சி.ஆர், ஸ்டுடியோ, பி.சி.ஆர், பி.கியூ.ஆர் மற்றும் சமூக ஊடக அறை ஆகியவற்றை பார்வையிட்டவாறு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு தாக்கூர், ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா உற்சாகமாக உள்ளது என்றார். இந்தியா முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் வரலாற்று அளவுகோல் என்றும் அவர் கூறினார் தலைவர்கள் உச்சிமாநாடு வரலாறு படைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச ஊடக மையத்தில் ஏற்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர், இது உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது என்றும் இது புதிய இந்தியாவின் சக்தியைக் காட்டுகிறது என்றும் கூறினார். இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பிரதிகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை ஒட்டி இந்த ஊடக மையம் உள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கான முக்கிய ஊடக மையம், ஹிமாலயா என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் 300 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இடமளிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்காக இந்தியா உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த தொழில்நுட்பத் திறன் இங்குள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"உச்சிமாநாட்டின் போது இந்தியா தனது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், அதே நேரத்தில் ஒரு புதிய இந்தியாவின் உயர்ந்த பிம்பத்தை முன்வைக்கும்" என்று உச்சிமாநாட்டின் போது இந்தியாவின் கணிப்புகள் குறித்து அமைச்சர் கூறினார்.
ஜி 20 உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களின் மிகப்பெரிய கூட்டத்தைக் காணும் என்று கூறிய அமைச்சர், உலகெங்கிலும் உள்ள ஊடக சகோதரத்துவத்தை அன்புடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வை ஒளிபரப்புவதற்காக விரிவான அமைப்பை உருவாக்கியதற்காக தூர்தர்ஷனைப் பாராட்டிய அவர், விமான நிலையம் முதல் பாரத் மண்டபம் வரை பல்வேறு இடங்களில் 78 க்கும் மேற்பட்ட யு.எச்.டி மற்றும் 4 கே கேமராக்கள் நிறுவப்பட்டதில் தூர்தர்ஷன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். அனைத்து ஊடகங்களுக்கும் தெளிவான படங்கள், வீடியோக்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
***
AD/BS/KRS
(Release ID: 1954955)
Visitor Counter : 142