கலாசாரத்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 02 SEP 2023 11:59AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் ('மேரா மட்டி மேரா தேஷ்') இயக்கத்தின் கீழ் அமிர்தக் கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் நோக்கம் என்று கூறினார். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நீண்ட கால அடிமைத்தனத்திற்குப் பிறகு பல லட்சக் கணக்கானவர்களின் தியாகங்களுக்குப் பிறகு, நாம் சுதந்திரம் பெற்றுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியரும் இணைந்து சிறந்த இந்தியாவை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

 

1857 முதல் 1947 வரை, 90 ஆண்டுகள், சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் நடைபெற்றதாகக் கூறிய அவர் எண்ணற்ற அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதயத்தில் தேசபக்தி நிறைந்த நமது பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒருவர் மட்டுமே இந்த "சங்கல்ப் சே சித்தி" (தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றுதல்) என்ற பயணத்தைத் தொடங்குவதை கற்பனை செய்ய முடியும்  என அவர் குறிப்பிட்டார்.

 

கையில் மண்ணுடன் உறுதிமொழி எடுத்து, தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம். ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், குடிமகனும், குழந்தையும் சிறந்த இந்தியாவை உருவாக்கும் எண்ணத்துடன் உணர்வுபூர்வமாக இணைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்று திரு அமித் ஷா கூறினார். செப்டம்பர் 1 முதல் 30 வரை, ஒவ்வொரு வீடும், பகுதி, கிராமம் என பல பகுதிகளில் இருந்தும், அக்டோபர் 1 முதல் 13 வரை வட்டாரத்திலும், பின்னர் அக்டோபர் 22 முதல் 27 வரை மாநில அளவிலும்  மண் சேகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

இறுதியாக அக்டோபர் 28 முதல் 30 வரை இந்த 7,500 பானைகள் நாட்டின் தலைநகரான புதுதில்லியை அடையும் என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த அமிர்தக் கலசத்திலிருந்து மண்ணை தில்லியில் நமது மாவீரர்களின் நினைவாக உருவாக்கப்படும் பூங்காவில் வைப்பார் என்று திரு அமித் ஷா கூறினார். இது அமிர்த காலத்தில் இந்தியாவை சிறந்ததாக மாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைவூட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த முன்முயற்சியில் பல திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், ஒவ்வொரு இந்தியரும் இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார் என்றும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது முழு நாட்டிலும் தேசபக்தி உணர்வை எழுப்பியுள்ளது என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட5 உறுதி மொழிகளை ஏற்று செயல்படுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்த்தை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். இந்த உறுதிமொழிகள் சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வழி என்று திரு அமித் ஷா கூறினார்.

 

 

இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால், என் மண் எனது தேசம் இயக்கம், இந்தியாவின் முழு வரலாறு, கலாச்சாரம் மற்றும் வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார். இது நமது கூட்டு அடையாளத்தின் கொண்டாட்டம் என அவர் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றாலும் நாம் ஒரு பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளோம் என்று திரு அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

 

***

SM/ANU/PLM/DL



(Release ID: 1954290) Visitor Counter : 168