இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரு அனுராக் சிங் தாக்கூர் தேசிய விளையாட்டு தினத்தன்று தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் இணையதளத்தை தொடங்கி வைத்தார்

ஃபிட் இந்தியா விநாடி வினாவின் மூன்றாவது பதிப்பை திரு அனுராக் சிங் தாக்கூர் அறிவித்தார்

புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4×400 மீட்டர் ஆண்கள் தொடர் ஓட்டப்பந்தையப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியை திரு அனுராக் சிங் தாக்கூர் பாராட்டினார்.

விளையாட்டுத் துறை முதல் சந்திரயான் வரை முத்திரை பதிக்கப்பட்டுள்ளது- இது புதிய இந்தியா: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்

Posted On: 29 AUG 2023 6:25PM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று (29-08-2023) ஜே.எல்.என் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஃபிட் இந்தியா விநாடி வினாவின் மூன்றாவது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் புதுதில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 பள்ளி மாணவர்கள், தேசிய விளையாட்டு சம்மேளனங்களைச் சேர்ந்த பல சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டையும் அமைச்சர் வெளியிட்டார். அத்துடன் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்புடாபெஸ்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஆசிய சாதனையை உருவாக்கிய 4×400 மீட்டர் ஆண்கள் ரிலே அணியையும் அமைச்சர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாக்கூர், ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் ஹாக்கியில் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்ததாகத் தெரிவித்தார். இந்த மாபெரும் வீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு இது பொருத்தமான நாள் என்று அவர் கூறினார்.

60 ஆண்டுகளில், உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில் அதிகபட்சமாக 18 பதக்கங்கள் மட்டுமே கிடைத்ததாகவும்  இந்த ஆண்டு மட்டும் 26 பதக்கங்களை வென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல, செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, மல்யுத்தத்தில் அந்திம் பங்கல், வில்வித்தையில் அதிதி கோபிசந்த் சுவாமி என அனைத்து விளையாட்டுகளிலும் அபாரமான வெற்றிகளைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். புடாபெஸ்ட் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும்,  4×400 மீட்டர் போட்டியில் இந்திய ரிலே அணி சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருல் சவுத்ரி மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோரும் சிறந்த திறனை வெளிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

ஃபிட் இந்தியா விநாடி வினாவின் இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து, 3 வது ஆண்டுப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மற்றும் உடற்தகுதி விநாடி வினாப் போட்டியான இது மொத்தம் ரூ3. .25 கோடி பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது என அவர் கூறினார். விளையாட்டுத் துறை முதல் சந்திரயான் வரை முத்திரையை இந்தியா பதித்துள்ளதாகவும் இது புதிய இந்தியா என்றும் திரு அனுராக் தாக்கூரி தெரிவித்தார்

***


(Release ID: 1953372) Visitor Counter : 139