பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா வந்தடைந்த பின்னர் பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 26 AUG 2023 8:13AM by PIB Chennai

பாரத் மாதா கி ஜெ, பாரத் மாதா கி ஜெ!

 

பாரத் மாதா கி ஜெ, பாரத் மாதா கி ஜெ!

 

பாரத் மாதா கி ஜெ!

 

இந்த முழக்கத்தை என்னுடன் எழுப்புங்கள்:  ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் ஜவான் - ஜெய் கிசான்,

 

அடுத்து, நான் இன்னும் ஒன்றைச் சொல்கிறேன். நான் ஜெய் விக்யான் (அறிவியல்) என்று சொல்வேன்.  நீங்கள் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என்று சொல்லுங்கள். ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்! ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்!

 

பெங்களூருவில் அழகான சூரிய உதயம் மற்றும் இந்த அற்புதமான காட்சியைக் காண்கிறேன். நாட்டின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு ஒரு பெரிய பரிசை வழங்கியபோது, அத்தகைய குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்தபோது, இன்று பெங்களூரில் நான் காணும் இதே காட்சியை கிரேக்கத்திலும் கண்டேன். ஜோகன்னஸ்பர்க்கிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதே நிலைதான். இந்திய அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்கள், எதிர்காலத்தைக் காணக்கூடியவர்கள் மட்டுமல்ல. மனிதநேயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றவர்களும் அத்தகைய ஆர்வமும் உற்சாகமும் நிறைந்தவர்கள் ஆவார்கள். நீங்கள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறீர்கள். நான் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு வெளிநாட்டில் இருந்ததால் என்னால் இங்கு வர முடியவில்லை. எனவே, நான் இந்தியா திரும்பியதும், முதலில் பெங்களூரு சென்று அந்த விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் கிளம்பிவிடுவேன். எனது பெங்களூர் பயணம் சுருக்கமான பயணம். எனவே வழக்கமான மரபுவழி முறைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டேன். நான் முறைப்படி கர்நாடகா வரும்போது, வழக்கமான நெறிமுறைகளை பின்பற்றலாம். இப்போது தேவை இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் ஒத்துழைத்தனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

விஞ்ஞானிகளை சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருப்பதால், இங்கு எனது நீண்ட உரையை நிகழ்த்துவதற்கான நேரம் இதுவல்ல. ஆனால் பெங்களூரு மக்கள் இன்னும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதால் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அதிகாலையில் இங்கு சிறு குழந்தைகளைக் கூட பார்க்க முடிகிறது. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மீண்டும் என்னோடு சேர்ந்து சொல்லுங்கள்; பாரத் மாதா கி-ஜே, பாரத் மாதா கி-ஜே, பாரத் மாதா கி-ஜே, ஜெய் ஜவான்-ஜெய் கிசான், ஜெய் ஜவான்-ஜெய் கிசான், ஜெய் ஜவான்-ஜெய் கிசான். இப்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்: ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்!

 

என் மனமார்ந்த நன்றி நண்பர்களே.

----

ANU/AP/PKV/DL


(Release ID: 1952447) Visitor Counter : 130