நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்தில் (கரீஃப் பயிர்) 521.27 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது

Posted On: 23 AUG 2023 10:37AM by PIB Chennai

2023-24 ஆம் ஆண்டு கரீப் பருவத்திற்கான கொள்முதல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் 21.08.2023 அன்று மாநில உணவு செயலாளர்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

எதிர்வரும் கரீப்  சந்தைப் பருவம் 2023-24 (கரீஃப் பயிர்) காலத்தில் 521.27 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு மதிப்பீடுகளான 518 லட்சம்  மெட்ரிக் டன்னுடன்  ஒப்பிடும்போது, முந்தைய கரீஃப் சந்தைப் பருவம் 2022-23 (கரீஃப் பயிர்) காலத்தில் 496 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.  சத்தீஸ்கர் (61 எல்எம்டி) மற்றும் தெலங்கானா (50 எல்எம்டி), ஒடிசா (44.28 எல்எம்டி), உத்தரப் பிரதேசம் (44 எல்எம்டி), ஹரியானா (40 எல்எம்டி), மத்தியப் பிரதேசம் (34 எல்எம்டி), பீகார் (30 எல்எம்டி), ஆந்திரப் பிரதேசம் (25 எல்எம்டி), மேற்கு வங்கம் (24 எல்எம்டி) மற்றும் தமிழ்நாடு (15 எல்எம்டி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2023-24 ஆம் ஆண்டில் 33.09  லட்சம் மெட்ரிக் டன் சிறுதானியங்கள் மாநிலங்களால் கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டில் 7.37 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை 6 சிறுதானியங்களை கேழ்வரகின் குறைந்தபட்ச ஆதார விலையில் மாநிலங்கள் கொள்முதல் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் கொள்முதல் மற்றும் நுகர்வை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு சிறுதானியங்களின் விநியோக காலத்தை மாற்றியமைத்துள்ளது, சிறுதானியங்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதை ஒருங்கிணைத்துள்ளது, மேம்பட்ட மானியம், நிர்வாக கட்டணம் 2% மற்றும் ஆறு சிறுதானியங்களை கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டு -2023 காரணமாக மட்டுமல்லாமல், பயிர்களை பன்முகப்படுத்துவதற்கும் உணவு முறைகளில் மேம்பட்ட ஊட்டச்சத்துக்கும் சிறுதானியங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், தேவையான சாக்குப்பைகள், நிர்ணயிக்கப்பட்ட கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கான வழித்தடத்தை மேம்படுத்துதல், கொள்முதல் நிலையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கோதுமை இருப்பு வரம்பு இணையதளம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகாராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உணவுத்துறை முதன்மை செயலாளர் / செயலாளர் அல்லது பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் இந்திய உணவுக் கழகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆகியவற்றின் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

***

ANU/AD/IR/AG


(Release ID: 1951327) Visitor Counter : 221