நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ஆகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு ஒதுக்கீட்டில் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
22 AUG 2023 5:09PM by PIB Chennai
ஓணம், ரக் ஷா பந்தன் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆகிய பண்டிகைகளையொட்டி சர்க்கரைக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 23.5 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூடுதல் ஒதுக்கீடு உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் நியாயமான விலையை உறுதி செய்யும்.
கடந்த ஓராண்டில் சர்வதேச சர்க்கரை விலை 25 சதவீதம் அதிகரித்த போதிலும், உள்நாட்டில் சர்க்கரையின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 43.30 ஆக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் சர்க்கரை விலை வருடாந்திர பணவீக்கம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
நடப்பு சர்க்கரை பருவத்தில் நாட்டில் 330 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வு சுமார் 275 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய போதுமான சர்க்கரை கையிருப்பு நாட்டில் உள்ளது. சர்க்கரை விலை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை- செப்டம்பர் மாதங்களில் உயர்ந்து, பின்னர் கரும்பு அரவை துவங்கும் போது குறையும். அதன் அடிப்படையில் சிறிய அளவில் விலை உயர்ந்து குறுகிய காலத்திற்கு நீடிக்கிறது.
***
AP/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1951170)
आगंतुक पटल : 172