சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

புதிய கார் மதிப்பீட்டுத் திட்டமான பாரத் என்சிஏபி என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்- 2023 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது

Posted On: 22 AUG 2023 2:30PM by PIB Chennai

நாட்டில்  3.5 டன் எடை வரையிலான வாகனங்களுக்கான பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரத் என்சிஏபி என்ற புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று (22.08.2023) புதுதில்லியில் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான கார்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில், தேர்வு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில்  நுகர்வோருக்கு உதவுவதில் இது ஒரு மைல்கல் நடவடிக்கை என்று கூறினார்.

பாரத் என்சிஏபி, இந்தியாவில் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை பெரிதும் மேம்படுத்தும் எனவும் பாதுகாப்பான வாகனங்களைத் தயாரிக்க அசல் உபகரண உற்பத்தி (ஓஇஎம்) நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் என்றும் திரு கட்கரி கூறினார்..

இந்தத் திட்டம் 3.5 டன் எடைக்கும் குறைவான எம்-1  வகையைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இது ஒரு தன்னார்வத் திட்டமாகும். இதில் ஒரு குறிப்பிட்ட மாதிரியின் அடிப்படை வகைகள் சோதிக்கப்படும்.

இந்தத் திட்டம் 2023 அக்டோபர் 1 முதல் தொடங்கும். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து வாகனப் பாதுகாப்பு அமைப்பில் முன்னேற்றத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. என்சிஏபி உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் வாகனங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பை அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு (ஓஇஎம்) வழங்குகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (சிஐஆர்டி.) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின்  ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

----------

AD/ANU/PLM/RS/KPG

 



(Release ID: 1951053) Visitor Counter : 147