தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தூய்மையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழல் அமைப்பை மேம்படுத்த மொபைல் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்காக இரண்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Posted On: 17 AUG 2023 6:55PM by PIB Chennai

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு  பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான  இயக்கத்திற்கு உதவுகிறதுஎனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக தொலைத்தொடர்பு வளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது முக்கியம்.

 

பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல்  சமூகத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின்  உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு சீர்திருத்தங்களை இன்று அறிமுகம் செய்தார்.

 

கேஒய்சி சீர்திருத்தங்கள் 

 

 விற்பனைப் புள்ளி  (பிஓஎஸ்) , பதிவு சீர்திருத்தம்

 

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்தியகுடிமக்களை மையமாகக் கொண்ட இணையப்பக்கமான  சஞ்சார் சாத்தி தொடங்கப்பட்டதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய சீர்திருத்தங்களின் திசையில் இந்த இரண்டு சீர்திருத்தங்களும் உள்ளன.

 

பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பதிவு சீர்திருத்தங்கள்-இந்தச் சீர்திருத்தம் உரிமதாரர்கள், முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை (பிஓஎஸ்) கட்டாயமாகப் பதிவு செய்வதற்கான செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. மோசடி நடைமுறைகள் மூலம் சமூக விரோத / தேச விரோத சக்திகளுக்கு சிம்களை வழங்கும்  பி..எஸ்ஸை அகற்ற இது உதவும்.

 

பி..எஸ் பதிவு செயல்முறை உரிமதாரரால் பி..எஸ் சரிபார்க்கப்படுவதை உள்ளடக்கியது. இந்த செயல்முறை பி..எஸ் மற்றும் உரிமதாரர்களுக்கு இடையில் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்துகிறது. ஒரு பி..எஸ் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு 03 ஆண்டுகளுக்கு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார். தற்போதுள்ள அனைத்து பி..எஸ்.களும் இந்த செயல்முறையின்படி உரிமதாரர்களால் 12 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படும்.

 

இது உரிமதாரர்களின் அமைப்பிலிருந்து அத்துமீறும் பிஓஎஸ்ஸை அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும், அகற்றவும் உதவும்; நேர்மையான பிஓஎஸ்ஸுக்கு ஒரு ஊக்கத்தை வழங்கும்.

 

கேஒய்சி சீர்திருத்தங்கள் -கேஒய்சி என்பது ஒரு வாடிக்கையாளரை தனித்துவமாக அடையாளம் காணும், ஒரு செயல்முறையாகும். தற்போதுள்ள கேஒய்சி செயல்முறையை வலுப்படுத்துவது தொலைத்தொடர்பு சேவைகளின் சந்தாதாரர்களை எந்தவொரு  மோசடியிலிருந்தும் பாதுகாப்பதற்கும், அதன் மூலம் டிஜிட்டல் சூழல் அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் ஒரு கருவியாகும்.

 

அச்சிடப்பட்ட ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அச்சிடப்பட்ட ஆதாரின் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மக்கள்தொகை விவரங்கள் கட்டாயமாக பெறப்படும்மொபைல் எண் துண்டிக்கப்பட்டால், அது 90 நாட்களில் காலாவதியாகும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் ஒதுக்கப்படாது. ஒரு சந்தாதாரர் தனது சிம் மாற்றுவதற்கு முழுமையான கேஒய்சி- மேற்கொள்ள வேண்டும், மேலும் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு 24 மணி நேர தடை இருக்கும்.

 

ஆதார் -கேஒய்சி செயல்பாட்டில் கட்டைவிரல் ரேகை மற்றும் கருவிழி அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு கூடுதலாக, முக அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரமும் அனுமதிக்கப்படுகிறது.

 

அதிநவீன தொழில்நுட்பத்தை விழிப்புடனும்  மேற்பார்வையுடனும் இணைப்பதன் மூலம், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல்தொடர்பு சூழலை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு வெளியில்  மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் பணியில் இத்துறை  உறுதியாக உள்ளது.

*****

ANU/SM/SMB/KRS



(Release ID: 1950011) Visitor Counter : 111