பிரதமர் அலுவலகம்

மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி

பாராலிம்பிக்ஸிலும் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றிச் செல்லும் வகையில் எங்கள் வீரர்களை உருவாக்கி வருகிறோம், இதற்காக வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது: பிரதமர் நரேந்திர மோடி

Posted On: 15 AUG 2023 5:01PM by PIB Chennai

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் மாதம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று விஸ்வகர்மா  திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டம் பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்கானது என்று அவர் கூறினார். கருவிகள் மற்றும் கைகளால் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த தச்சர்கள், பொற்கொல்லர்கள், கல் கொத்தனார்கள், சலவை செய்பவர்கள், முடி வெட்டும் சகோதர, சகோதரிகள் போன்றோருக்கு குடும்பம் புதிய பலத்தை அளிக்கும். இந்த திட்டம் சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்படும்.

செங்கோட்டையின் கொத்தளத்தில்  இருந்து தமது உரையில், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உழைத்து வருகிறோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். பாராலிம்பிக்ஸிலும் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றும் திறன் கொண்ட வீரர்களை உருவாக்குகிறோம் என்றார். இதற்காக வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையில், இன்று இந்தியாவில் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது என்று கூறினார். மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நனவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

***

ANU/PKV/KRS



(Release ID: 1949180) Visitor Counter : 118