பிரதமர் அலுவலகம்
மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க 25,000 மக்கள் மருந்தக மையங்களை திறக்க அரசு முடிவு
மக்கள் மருந்தக மையங்கள் ரூ.20,000 கோடி சேமிப்பின் மூலம் நாட்டின் நடுத்தர வர்க்கத்திற்கு புதிய பலத்தை அளித்துள்ளன.
மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
15 AUG 2023 1:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையின் போது, மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளன என்று அவர் கூறினார். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 பில் வருகிறது.
மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.
பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு ரூ .13,000 முதல் ரூ .15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தும். மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பிரதமர்.
***
PKV/DL
(रिलीज़ आईडी: 1948986)
आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada