பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா புதிய உத்திபூர்வ வலிமையைப் பெற்றுள்ளது; எல்லைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பாக உள்ளன: செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி


"ஆயுதப்படைகள் நவீனமயமாக்கப்படுகின்றன; எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துவதே எங்கள் முன்னுரிமை" என்று தெரிவித்துள்ளார்

Posted On: 15 AUG 2023 2:00PM by PIB Chennai

"சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா ஒரு புதிய உத்திபூர்வ வலிமையைப் பெற்றுள்ளது, இன்று நமது எல்லைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பாக உள்ளன" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2023 அன்று 77வதுசுதந்திர தினத்தன்று டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதற்கும், எதிர்கால அனைத்து சவால்களையும் சமாளிக்க அவர்களை  மாற்றுவதற்கும் பல ராணுவ சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், நாட்டு மக்கள் இன்று பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். நாடு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்போது, வளர்ச்சியின் புதிய இலக்குகளை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் குறிப்பிட்டார், இது ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது. "ஓ.ஆர்.ஓ.பி என்பது நம் நாட்டின் வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விஷயம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை செயல்படுத்தினோம். 70,000 கோடி ரூபாய் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சென்றடைந்துள்ளது.

நாடு பாதுகாக்கப்படுவதையும், அதன் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் எல்லைகளில் உள்ள ஆயுதப்படை வீரர்களுக்கு பிரதமர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

***

PKV/DL


(Release ID: 1948967) Visitor Counter : 141