பிரதமர் அலுவலகம்
மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
15 AUG 2023 8:42AM by PIB Chennai
இன்று, 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது என்றும், அங்குள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காணப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மணிப்பூரில் அமைதியின்மை, வன்முறை மற்றும் பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் உள்ளன என்று கூறிய அவர், மணிப்பூர் மக்கள் சிறிது காலமாக அமைதியைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டு, அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். "அந்த பிரச்சினைகளைத் தீர்க்க மாநில மற்றும் மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்படுகின்றன, அதைத் தொடர்ந்து செய்வோம்", என்று அவர் கூறினார்.
------
ANU/AD/BR/DL
(रिलीज़ आईडी: 1948809)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam