உள்துறை அமைச்சகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, உரையாற்றினார்

Posted On: 13 AUG 2023 3:00PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர்  பூபேந்திர படேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, கைகளில் மூவண்ணக் கொடியுடன் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது, நாட்டின் ஒவ்வொரு குழந்தை மற்றும் இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சி வெற்றியடைந்து வருவதாகத் தெரிகிறது என்று  கூறினார். ஆகஸ்ட் 15, 2022 அன்று, மூவண்ணக் கொடி ஏற்றாத, செல்பி எடுக்காத வீடே நாட்டில் இல்லை என்று அவர்  கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மீண்டும் மூவண்ணக் கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று திரு. ஷா கூறினார். குஜராத்தில் இருந்து மண்ணையும், மூவண்ணக் கொடியையும் சுமந்து செல்லும் இளைஞர்கள் தில்லியை அடைவார்கள். இந்த இளைஞர்கள் நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்ட மண் மற்றும் மூவண்ணக் கொடியை தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பார்கள். இளைஞர் சக்தி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறந்த இந்தியாவுக்கான உறுதியை பரப்பும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்,  விடுதலையின் அமிர்தப் பெருவிழா இயக்கம் தேசபக்தி அலையை எழுப்பும் ஊடகமாக மாறியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார், இதேபோல் '     என் மண், என் தேசம் ' திட்டமும் வரும் நாட்களில் ஒரு சிறந்த, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான  தீர்மானத்தை நிறைவேற்றும். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி, செல்ஃபிக்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார், மக்களின் இந்த முயற்சி முழு நாட்டையும் சிறந்ததாக மாற்றும் பிரச்சாரமாக மாறும். இளைஞர்கள் தன் முன் நிற்கும் உற்சாகத்தால், இந்த பிரச்சாரம் தேசபக்தி உணர்வை முன்னெடுத்துச் செல்லும் என்றும், மக்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே நாட்டை சிறந்ததாக மாற்றுவதற்கான உறுதியை உள்வாங்கும் என்றும் திரு ஷா கூறினார்.

 

எனவே, விடுதலையின் அமிர்தப் பெருவிழா  ஆண்டில், நாடு முழுவதும் தேசபக்தி அலையை உருவாக்கும் பணியை பிரதமர் திரு. நரேந்திர மோடி செய்துள்ளார் என்று திரு. அமித் ஷா கூறினார். ஆகஸ்ட் 15, 2023 அன்று, இடுதலையின் அமிர்தப் பெருவிழா முடிவடையும் என்றும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், நாடு 15 ஆகஸ்ட் 2023 முதல் 15 ஆகஸ்ட் 2047 வரை சுதந்திர தினத்தை கொண்டாடும் என்றும் அவர் கூறினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரையிலான பயணத்தில், நாட்டை சிறந்ததாகவும், அனைத்து துறைகளிலும் முதன்மையானதாகவும் மாற்றுவோம். குறிப்பாக நமது இளைய தலைமுறையினருக்கு அமிர்த காலத்தில் இது மிகவும் முக்கியமானது என்று திரு ஷா கூறினார். 1857 முதல் 1947 வரையிலான 90 ஆண்டுகளில் இளம் தலைமுறையினர் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தி நாட்டை அடிமைத்தனத்தின் பிடியில் இருந்து விடுவித்தது போல, இளம் தலைமுறையினர் 2023 முதல் 2047 வரையிலான அடுத்த 25 ஆண்டுகளை பாரதத் தாய்க்கு அர்ப்பணித்து இந்தியாவை மகத்தானதாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திரு. நரேந்திர மோடி, இடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டை நாட்டு மக்கள் முன் மிகவும் நல்ல மனப்பான்மையுடன் வைத்துள்ளார். 1857 முதல் 1947 வரையிலான 90 ஆண்டுகளில் லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்ந்து போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நாட்டை விடுவித்தனர். இதன் விளைவாக, கடந்த 75 ஆண்டுகளாக, நம் நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பல  வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர் என்று திரு ஷா கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மகிழ்ச்சியுடன் அவரது மரணத்தை ஏற்றுக்கொண்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை எழுப்பி தூக்கு மேடைக்குச் சென்றார். 17 வயதான குதிராம் போஸ், சாதி, மதம், மாநிலம், பிராந்தியம் பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தார், மறுபுறம், 80 வயதான பாபு குன்வர் சிங்  1857 ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்தார். நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் வெறும் தியாகம் மட்டுமல்ல, நாட்டுக்காக வாழ்வது நமக்கும், வரும் சந்ததியினருக்கும் ஒரு மதிப்பு என்று அவர் கூறினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, நாம் நாட்டிற்காக இறக்க முடியாது, ஆனால் நாட்டிற்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று திரு. அமித் ஷா  கூறினார்.

**************  

ANU/SM/PKV/DL



(Release ID: 1948339) Visitor Counter : 141