வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7-வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்

Posted On: 08 AUG 2023 12:19PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள்,  உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தென்னாப்பிரிக்காவின் தலைமையில் மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட "7 வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில்" பங்கேற்றார். ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள், தொழில் காப்பகங்கள்  மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் 2023 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் ஸ்டார்ட்அப் மன்றத்தை இந்தியா தொடங்கும் என்று திரு கோயல் அறிவித்தார்.

பியூஷ் கோயல், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்து, நாட்டில் கிட்டத்தட்ட 1,00,000 ஸ்டார்ட்அப்களை உருவாக்க வழிவகுத்த ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி குறித்தும் குறிப்பிட்டார்.  "உற்பத்தி முறைகளை மாற்றியமைத்தல்" மற்றும் பிற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கும் பரந்த சர்வதேச சமூகத்திற்கும் இந்தியா வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் அமைச்சர் விளக்கினார்.

"வசுதைவ குடும்பகம்" ('உலகம் ஒரே குடும்பம்') என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு பியூஷ் கோயல் மீண்டும் வலியுறுத்தினார். மற்ற  பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) தொழில்துறை அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளிடையே டிஜிட்டல் மயமாக்கல், தொழில்மயமாக்கல், புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்குதல், முதலீடு ஆகியவற்றின் அவசியத்தை அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தினர். அனைத்து பொருளாதாரத் துறைகளின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதில் தொழில்துறை 4.0 மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரித்தனர். இந்த பிரகடனத்தின் மூலம், பிரிக்ஸ் உறுப்பினர்கள் மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் திட்டங்களில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஆராய்வதன் அவசியத்தை ஒப்புக்கொண்டனர்.

திறந்த, நியாயமான, துடிப்பான, நெகிழ்வான மற்றும் பாகுபாடற்ற சூழலை கூட்டாக உருவாக்குவதன் மூலம் தொழில்துறை ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், தொழில்துறை பொருளாதாரத்தின் மீட்பு மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கியப் பங்கு மற்றும் உலகளாவிய தொழில் சங்கிலிகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகளில் அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகப்படுத்தலின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் அங்கீகரித்தனர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு சொந்தமான / நிர்வகிக்கப்படும் திட்டங்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளுக்குள் சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

***


(Release ID: 1946635) Visitor Counter : 139