இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 643.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்
Posted On:
03 AUG 2023 7:39PM by PIB Chennai
வடகிழக்குப் பகுதிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்று (03-08-2023) வாய்மொழியாக பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்குப் பகுதிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பு கடந்த ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார். நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொத்தம் ரூ.643.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டுக்குள் மொத்தம் 1000 கேலோ இந்தியா மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அவற்றில் 227 கேலோ இந்தியா மையங்கள் வடகிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதிளில், ரூ. 520.60 கோடி மதிப்பீட்டில் 75 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
பல்வேறு விளையாட்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பை எடுத்துரைத்த அமைச்சர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மேரி கோம், மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹெய்ன் போன்ற பெண் விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார். பைசுங் பூட்டியா மற்றும் ஷிவா தாபா ஆகியோரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
பாரா-தடகள வீரர்கள், காது கேளாத விளையாட்டு வீரர்கள் அல்லது சிறப்பு விளையாட்டு வீரர்கள் என அனைத்துத் தரப்பு விளையாட்டு வீரர்களுக்கும் வாய்ப்புகள் மற்றும் வசதிகள் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். நாட்டிற்கு உத்வேகத்தையும், பெருமையையும் அளிக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
SM/PLM/KRS
(Release ID: 1945636)
Visitor Counter : 139