சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

13-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினார்

Posted On: 03 AUG 2023 1:05PM by PIB Chennai

"ருவருக்கு உயிரைக் கொடுப்பதை விட மனித குலத்திற்குச் செய்யும் பெரிய சேவை வேறு எதுவும் இருக்க முடியாது" என்று தில்லியில் இன்று நடைபெற்ற 13-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்களான டாக்டர் பாரதி பிரவீன் பவார், பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கள் அன்புக்குரியவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான துணிச்சலான முடிவை எடுத்ததற்காகவும், இறந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவும், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை அங்கீகரித்து அவர்களுக்கு விருது வழங்குவதற்காகவும் 13-வது  இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சி  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் முக்கியம் என்று கூறினார். "2013 ஆம் ஆண்டில், சுமார் 5,000 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இப்போது ஆண்டுக்கு 15,000 க்கும் மேற்பட்டவர்கள உறுப்பு தானம்  செய்பவர்களாக உள்ளனர்  என்று தெரிவித்தார்".

நாட்டில் உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்வோருக்கான விடுப்பு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 65 வயது வரம்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்பு தானம் செய்யும் செயல்முறை மேலும் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் உடல் உறுப்பு தானத்தை பிரபலப்படுத்த மேலும் பல கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் பங்களிப்பை பாராட்டிய டாக்டர் மாண்டவியா, அவர்களின் உந்துதல் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் பெறுவோர் இந்த உன்னத சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், மனித குல சேவைக்காக மற்றவர்களும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அதுல் கோயல், நோட்டோ இயக்குநர் டாக்டர் அனில் குமார், நன்கொடையாளர் குடும்பங்கள், cly; உறுப்பு பெறுநர்கள், மாணவர்கள் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

****

 

ANU/AD/IR/KPG/GK



(Release ID: 1945542) Visitor Counter : 339