எஃகுத்துறை அமைச்சகம்
ஜூலை 2023 இல் எம்ஓஐஎல், உற்பத்தி மற்றும் விற்பனையில் சாதனை படைத்தது
Posted On:
03 AUG 2023 11:53AM by PIB Chennai
இந்தியாவில் மிகப் பெரிய மாங்கனீசு தாது உற்பத்தியாளரான எம்ஓஐஎல் லிமிடெட், தொடங்கப்பட்டதிலிருந்து ஜூலை மாதத்தில் அதன் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. ஜூலை 2023-ல் இந்நிறுவனம் 1.20 லட்சம் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 71% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. எம்ஓஐஎல் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஜூலை மாதத்தில் அதிக உற்பத்தியைக் கண்டுள்ளது.
எம்ஓஐஎல் லிமிடெட் ஜூலை 2023-ல், 0.94 லட்சம் டன் அளவிற்கு சிறந்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 69% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மாங்கனீசு தாதுவின் வலுவான தேவையை விற்பனைப் பதிவு பிரதிபலிக்கிறது.
*****
ANU/AD/IR/KPG/GK
(Release ID: 1945368)
Visitor Counter : 113