உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
நாட்டில் 86 விமான நிலையங்கள் பசுமை எரிசக்தியைப் பயன்படுத்துகின்றன
Posted On:
03 AUG 2023 12:56PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள 86 விமான நிலையங்கள் பசுமை எரிசக்தியைப் பயன்படுத்துகின்றன. இதில் விமான நிலையத்தின் மொத்த எரிசக்தி நுகர்வில் பசுமை எரிசக்தியின் பங்களிப்பு 55 விமான நிலையங்களில் 100% ஆகும். இந்த விமான நிலையங்களின் பட்டியல் இணைப்பில் உள்ளது.
இருப்பினும், விமான நிலையங்களில் கார்பன் உமிழ்வின் முக்கிய ஆதாரமாக பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாடு உள்ளது, இதனால் புதுப்பிக்க முடியாத எரிசக்தியை பசுமை எரிசக்தியுடன் மாற்றுவது விமான நிலையத்தின் கார்பன் தடத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, திட்டமிடப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட அனைத்து செயல்பாட்டு விமான நிலையங்கள் மற்றும் வரவிருக்கும் பசுமை விமான நிலையங்களை உருவாக்குபவர்கள் கார்பன் நடுநிலை மற்றும் பூஜ்யம் காபர்ன் நிலையை அடைவதற்காகப் பணியாற்றுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் புதுப்பிக்கத்தக்க / பசுமை எரிசக்திப் பயன்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனலின் (ஏசிஐ) அங்கீகார திட்டத்தின்படி, இங்கிலாந்தில் ஹீத்ரோ, பிரிஸ்டல் & லண்டன் கேட்விக், நெதர்லாந்து (இங்கிலாந்து), ஆம்ஸ்டர்டாம், கிரேக்கத்தின் ஏதென்ஸ், நார்வேயின் ஓஸ்லோ, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ், ஹங்கேரியின் புடாபெஸ்ட், டென்மார்க்கின் கோபன்ஹேகன், அமெரிக்காவில் சான் டியாகோ, கனடாவின் வான்கூவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷார்ஜா போன்ற விமான நிலையங்கள் உள்ளன.
இத்தகவலை விமானப் போக்குவரத்து இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி.கே.சிங் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
ANU/AD/IR/KPG/GK
(Release ID: 1945362)
Visitor Counter : 177