குடியரசுத் தலைவர் செயலகம்
மலாவி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
31 JUL 2023 5:44PM by PIB Chennai
மலாவி நாட்டின் நாடாளுமன்ற அவைத்தலைவர் ரைட் ஹானரபிள் கேத்தரின் கோதானி ஹரா தலைமையிலான மலாவி நாடாளுமன்றக் குழுவினர் இன்று (ஜூலை 31, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
தூதுக்குழுவினரை வரவேற்ற குடியரசுத்தலைவர் , இந்தியாவும் மலாவியும் நீண்டகாலமாக சுமூகமான நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பன்முகத்தன்மை மீதான நமது பொதுவான நம்பிக்கை இந்தியாவையும் மலாவியையும் இயற்கையான கூட்டாளிகளாக்குகின்றன என்று அவர் கூறினார்.
மலாவியின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தனியார் முதலீட்டு கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், சுகாதாரம் மற்றும் கல்விக்காக மலாவி நாட்டினரின் விருப்பமான இடமாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் குடியரசுத்தலைவர் கூறினார். மலாவியுடன் இந்தியா வலுவான வளர்ச்சிக் கூட்டாண்மை திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதையும், உள்கட்டமைப்பு, சுகாதாரம், நீராதாரங்கள், திறன் மேம்பாடு, கல்வி போன்ற துறைகளில் மலாவியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
***
ANU/AD/SMB/KPG
(रिलीज़ आईडी: 1944464)
आगंतुक पटल : 161