நிதி அமைச்சகம்
2023-24 நிதியாண்டில், 2023 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசுக் கணக்குகளின் மாதாந்திர மறுஆய்வு
Posted On:
31 JUL 2023 4:21PM by PIB Chennai
2023 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-
2023 ஜூன் மாதம் வரை இந்திய அரசு ரூ .5,99,291 கோடியை (மொத்த வரவுகளில் 22.1%) பெற்றுள்ளது. இதில் ரூ .4,33,620 கோடி வரி வருவாயாகவும், ரூ .1,54,968 கோடி வரி அல்லாத வருவாயாகவும், ரூ .10,703 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகளாகவும் உள்ளன. இதே காலகட்டம் வரை ரூ.2,36,560 கோடி மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வாக மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.93,785 கோடி அதிகமாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.10,50,661 கோடி (23-24-ல் 23.3%). இதில் ரூ.7,72,181 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.2,78,480 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், 2,43,705 கோடி ரூபாய் வட்டி செலுத்துவதற்காகவும், 87,035 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
----
ANU/PLM/KPG
(Release ID: 1944421)
Visitor Counter : 150