மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நம்பகமான உலகளாவிய மின்னணு உற்பத்தி கூட்டாளியாக இந்தியா உருவெடுக்கிறது: செமிகான் இந்தியா 2023இன் இறுதி நாளில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்
Posted On:
31 JUL 2023 9:12AM by PIB Chennai
வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், செமிகான் இந்தியா 2023-இன் கடைசி நாளன்று உரையாற்றினார். முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் பங்கு மற்றும் மின்னணு துறையில், குறிப்பாக குறைக்கடத்திகளில் இந்தியாவின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நம்பகமான உலகளாவிய மின்னணு உற்பத்தி கூட்டாளியாக இந்தியா வளர்ந்து வருவதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இந்த வகையில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிற நாடுகளுடனான வரவிருக்கும் வாய்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மூன்று நாள் செமிகான்இந்தியா 2023 மாநாட்டின் இறுதி நாளில், தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள், கல்வி மற்றும் அரசு என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறைக்கடத்தி உற்பத்தி தொடர்பான குறிப்பிடத்தக்க அம்சங்களின் முக்கியத்துவத்தையும், வலுவான, நெகிழ்வான மற்றும் நிலையான குறைக்கடத்தி சூழலியலின் வளர்ச்சியை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் பல்வேறு அமர்வுகளும், ஆலோசனைகளும் வெளிப்படுத்தின.
"வசுதைவ குடும்பகம்" அல்லது "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" அதாவது சமமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பகிரப்பட்ட எதிர்காலம் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. இதைக் கருத்தில் கொண்டு, என்.எஸ்.சி.எஸ் உறுப்பினர் திரு அன்ஷுமன் திரிபாதி தலைமையில் "நம்பகமான மற்றும் நெகிழ்வான குறைக்கடத்தி விநியோக சங்கிலிக்கான சர்வதேச ஒத்துழைப்பு" என்ற தலைப்பில் ஒரு பிரத்யேக குழு விவாதம் நடைபெற்றது. இதேபோல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த குழு விவாதத்தில் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் ஸ்ரீ சந்தோஷ் குமார் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வல்லுநர்கள் பங்கேற்றனர்.
உலகளாவிய நிறுவனங்களையும் கல்வித்துறையையும் உயர்மட்ட தலைமையாக ஈடுபடுத்தி, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், குறிப்பாக குறைக்கடத்திகளின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் செமிகான்இந்தியாவின் இரண்டாவது பதிப்பு இந்தியாவை மையப்படுத்தி உள்ளது. மின்னணு மற்றும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் குறைக்கடத்தி பயணத்தின் முறையான துவக்கத்தை இது குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1944210
***
ANU/BR/AG
(Release ID: 1944268)
Visitor Counter : 136