கூட்டுறவு அமைச்சகம்

தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு மூலம் பொதுச் சேவை மையங்களின் சேவை குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய உள்துறை மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2023 ஜூலை 21 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்க உள்ளார்.

Posted On: 19 JUL 2023 5:10PM by PIB Chennai

தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு  மூலம் பொதுச் சேவை  மையங்களின் சேவை குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய உள்துறை மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2023 ஜூலை 21 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்க உள்ளார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி  வைஷ்ணவ் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். கூட்டுறவு அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் பொதுச் சேவை மையத்துடன் இணைந்து இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.  தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு மூலம் அளிக்கப்படும் பொது சேவை மையங்களின் சேவை  தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.  தற்போது வரை பொது சேவை மைய இணையதளத்தில் 17,000 தொடக்க வேளாண் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. இதில், 6,000 தொடக்க வேளாண் கூட்டுறவு அமைப்புகள் பொது சேவை மையங்களாக ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளன.

***

SM/IR/KPG/KRS 

 
 
 


(Release ID: 1940829) Visitor Counter : 176