நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர தரவரிசைக்கான பதிவுத் தேதி நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 19 JUL 2023 3:18PM by PIB Chennai

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர தரவரிசைக்கான சுயமதிப்பீடு பதிவுக்கான கடைசி நாள் 2023, ஜூலை 15-லிருந்து ஜூலை 25-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டின் நட்சத்திர தரவரிசைக்கான அனைத்து நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் பதிவு குறித்த அறிவிக்கை 2023 மே 30 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 ஜூன் 1 முதல் நட்சத்திர தரவரிசை இணையதளத்தில் பதிவு தொடங்கியது.  2023 ஜூலை 14 வரை இந்த இணையதளத்தில் ஏற்கனவே 377 சுரங்கங்கள் பதிவு செய்துள்ளன. எனினும், அதிக அளவில் பங்கேற்பதையும் மேலும் பல சுரங்கங்கள் பதிவு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கவும், சுயமதிப்பீடு நடைமுறையை நிறைவு செய்யும் வகையிலும் பதிவு செய்வதற்கான கடைசி நாளை நிலக்கரி அமைச்சகம் நீட்டித்துள்ளது.

***

LK/IR/KPG/RJ


(रिलीज़ आईडी: 1940770) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam