சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் அண்மைத் தகவல்கள்

இந்தியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கான கொவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது

Posted On: 19 JUL 2023 1:07PM by PIB Chennai

கொவிட்-19-ன் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலகம் முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியதைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகளுக்கான கொவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 2023, ஜூலை 20 முதல் அமலுக்கு வரும். அதன்படி, சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்,டி-பிசிஆர் பரிசோதனை நடத்துவது தற்போது கைவிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பு தொடர்பாக விமான நிறுவனங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 சூழ்நிலைக் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

------

LK/IR/KPG/RR(Release ID: 1940734) Visitor Counter : 137