நித்தி ஆயோக்

5 ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளனர்

Posted On: 17 JUL 2023 1:38PM by PIB Chennai

நிதி ஆயோக்கின் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு: முன்னேற்ற ஆய்வு 2023-ன் அறிக்கை படி 2015-16 மற்றும் 2019-21-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 13.5 கோடி மக்கள் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளனர்.

நிதி ஆயோக் உறுப்பினர்கள் டாக்டர். வி.கே. பால், டாக்டர். அரவிந்த் விர்மானி மற்றும் நிதி ஆயோக் சிஇஓ திரு.பி.வி.ஆர். சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு. சுமன் பெர்ரி இன்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடானது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள குறைபாட்டினை அளவிடுகிறது. இந்த மூன்றின் கீழ், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரின் இறப்பு, பள்ளிப்படிப்பு, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட குறியீடுகளில் உள்ள முன்னேற்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி, 2015-16-ம் ஆண்டில் 24.85%-ஆக இருந்த இந்தியாவின் பல பரிமாண ஏழைகளின் எண்ணிக்கை 9.89% குறைந்து, 2019-2021-ம் ஆண்டில் 14.96%-ஆக உள்ளது. கிராமப்புற வறுமை 32.59%-ல் இருந்து 19.28%-ஆகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், நகர்ப்புற  வறுமை 8.65%-ல் இருந்து 5.27%-ஆகக் குறைந்துள்ளது. 3.43 கோடி மக்கள் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளனர். வறுமைக் குறைப்பில் உத்தரப் பிரதேசம் முன்னிலையில் உள்ளது. தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையை www.niti.gov.in-ல் காணலாம்.

 

***

(Release ID: 1940125)

 


(Release ID: 1940190) Visitor Counter : 605