நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் தலையீட்டுக்குப் பின்னர் தக்காளியின் மொத்த விலை குறைந்துள்ளது அரசு இன்று முதல் தக்காளியை ரூ.80க்கு விற்பனை செய்கிறது

प्रविष्टि तिथि: 16 JUL 2023 11:10AM by PIB Chennai

நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து இருந்த நிலையில், ஒரு கிலோ 90 ரூபாய்க்கு சலுகை விலையில் விற்பனை செய்யும் வகையில்  அரசு தலையிட்டதால், தக்காளி மொத்த விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட  இடங்களில் நிலைமையை ஆய்வு  செய்த பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16, 2023)  முதல் ஒரு கிலோ எண்பது ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. NAFED மற்றும் NCCF மூலம்,  தில்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இடங்களில்   நிலவும் சந்தை விலையைப் பொறுத்து நாளை முதல் இது பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

***

AP/PKV/DL


(रिलीज़ आईडी: 1939929) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Odia , Telugu