பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 14 JUL 2023 9:22PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 14 ஜூலை 2023 அன்று ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் தலைவரும், நாடாளுமன்றத்தின் மூத்த தலைவருமான மேதகு திருமதி. யேல் பிரவுன்-பிவெட்டை பாரிஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லமான ஹோட்டல் டி லஸ்ஸேயில் மதிய உணவின் போது சந்தித்தார்.

 

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

 

ஃபிரான்ஸ் அரசு இந்தியாவின் பரந்த தேர்தல் நடைமுறையைப் பாராட்டியது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட உத்திகள் கூட்டுறவின் பல்வேறு தூண்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

***

AP/ASD/DL


(रिलीज़ आईडी: 1939704) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam