குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 14 JUL 2023 4:22PM by PIB Chennai

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சியில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்துகிறது!"

(Release ID: 1939498)

SM/CR/KRS



(Release ID: 1939594) Visitor Counter : 116