குடியரசுத் தலைவர் செயலகம்

முஸ்லீம் உலக லீக்கின் தலைமைச் செயலாளர் குடியரசுத் தலைவரை சந்தித்தார்

Posted On: 12 JUL 2023 1:34PM by PIB Chennai

முஸ்லீம் உலக லீக்கின் தலைமைச் செயலாளர் டாக்டர்  முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா, குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

இந்தியாவிற்கு அலுவல ரீதியாக முதன் முறையாக  வந்துள்ள டாக்டர் அல்-இசாவை வரவேற்ற குடியரசுத்தலைவர் சகிப்புத்தன்மை, உணர்வுகளின் மிதமான தன்மை, சமயங்களுக்கு இடையேயான உரையாடல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முஸ்லீம் உலக லீக்கின் நோக்கங்களையும், பங்களிப்பையும் இந்தியா பாராட்டுவதாகத் தெரிவித்தார். பன்முக கலாச்சாரம், பன்முக மொழி, பல இனத்தவர், பன்முக சமயச்சமூகம் என்று வேற்றுமையில் ஒற்றுமையை இந்தியா கொண்டாடுவதாக கூறினார். 200 மில்லியனுக்கு  மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லீம்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவுடனான நட்புறவுக்கு இந்தியா, சிறந்த முக்கியத்துவம் அளிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இருநாட்டு மக்கள் இடையேயான தொடர்பு, வர்த்தகம் ஆகியவற்றில்  இரு நாடுகள் நீண்ட கால இணக்கமான நட்புறவு கொண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய மதிப்பு வாய்ந்த போதனைகள், நமது இரு நாடுகளிடமும் உள்ளன என்று அவர் அப்போது கூறினார்.

தீவிரவாதத்தின்  அனைத்து வடிவங்களையும் இந்தியாவும், சவுதி அரேபியாவும் கண்டிப்பதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், தீவிரவாதம் முழுமையாக சகித்துக்கொள்ளக் கூடாதது என்று வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938873  

***

LK/IR/RS/AG



(Release ID: 1938923) Visitor Counter : 176