கலாசாரத்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் ஹம்பியில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 3-வது கலாச்சாரப் பணிக்குழுக்கூட்டம் நிறைவடைந்தது
Posted On:
12 JUL 2023 12:37PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் ஹம்பியில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 3-வது கலாச்சாரப் பணிக்குழுக்கூட்டம் நிறைவடைந்தது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், மூன்றாவது கலாச்சாரப் பணிக்குழுக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம், 2023 ஜூலை 11 அன்று நிறைவடைந்தது. வாரணாசியில் 2023 ஆகஸ்ட் 26 அன்று நடைபெற உள்ள ஜி20 கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவாதத்துடன் மூன்றாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் இறுதி அமர்வு நடைபெற்றது.
முன்னதாக, கஜூராஹோ, புவனேஸ்வர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலாச்சாரப் பணிக்குழு கூட்டத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் குறித்து மூன்றாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜி20 பிரதிநிதிகள், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள ஹசாரா ராமா கோவிலில் நடைபெற்ற யோகா அமர்விலும் பங்கேற்றனர்.
ஹம்பியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க “குயின்ஸ் பாத்” எனப்படும் அரச குடும்ப குளியல் அறை பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜூலை 10 அன்று நடைபெற்ற மூன்றாவது ஜி20 கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி உரையாற்றினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938856
***
LK/IR/RS/AG
(Release ID: 1938912)
Visitor Counter : 162